நாடு மீண்டுவிட்டதாக ரணில் கூறுவது பொய்

நாடு மீண்டுவிட்டதாக ரணில் கூறுவது பொய்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை காப்பாற்ற முன்வந்தார் என்பது முற்றிலும் தவறானதெனவும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகும் வகையிலேயே அவருடைய பாராளுமன்ற உரை அமைந்திருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் தற்போது சுருங்கி, கடன் பொறிக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகும் வகையில் நாடு காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரை நிகழ்த்துகிறார். மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக சொல்ல முடியாததால் பல பொய்களை கூறுகிறார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபோது, அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்தார்.

அதன்பிறகு, பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி போட்டிக்கு அவர் மட்டும் தோன்றவில்லை. மேலும் இருவர் முன் வந்திருந்தனர். எமது தலைவர் அநுர திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுன பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டார்.

அவர் மட்டுமே முன்வந்தார் என்பது முற்றிலும் தவறானது. அவர் பொதுஜன பெரமுன பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டார், நாட்டை மீட்பதற்காக அல்ல. நீங்கள் நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டீர்கள் என்பது மட்டும் பொய். நாடு மீண்டுவிட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் செய்தது பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்வதே. கடன் பொறியின் விளைவுகளால் நாடு திவாலாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஏழ்மையான மற்றும் சக்தியற்ற குடிமக்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர். குறைந்தபட்சம் அந்த அர்ப்பணிப்பை அவர் பாராட்ட வேண்டும். ஊழலையும், மோசடியையும் தடுத்து நிறுத்தி மின்சார சபை அதிக லாபம் ஈட்டவில்லை. மின்சாரத்திற்கான கட்டணத்தை பெருமளவில் உயர்த்தி அந்த நிலையை அடைந்துள்ளனர்.

பொருளாதாரக் கொலைகாரர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் இந்நாட்டு மக்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும். இந்த அரசியல்வாதிகள் யாருடனும் மக்கள் நிற்கவில்லை. தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மேல்மட்டத்தில் அரசியல் ஒப்பந்தங்களைச் செய்வதுதான் ஒரே உத்தி. மக்களுடன் உண்மையான அரசியல் செய்யும் திறன் அவர்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )