ஜே.வி.பி.க்கு இந்தியா 300 கோடி ரூபா வழங்கியதா?; மிஹிந்தலை விகாராதிபதி கேள்வி

ஜே.வி.பி.க்கு இந்தியா 300 கோடி ரூபா வழங்கியதா?; மிஹிந்தலை விகாராதிபதி கேள்வி

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு சென்ற தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் செலவுகளுக்காக 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பதில் வழங்க வேண்டுமென மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர்,

அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சிவப்பு சகோதரர்களுக்கு 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். .

இந்தப் பணம் தேர்தலுக்கு செலவு செய்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து சிவப்பு சகோதரர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று அண்மையில் ஐந்து நாட்கள் விஜயமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றிருந்தனர்.

அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் குஜராத் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினர். தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளின் இந்திய விஜயம் இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்தது.

இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வந்த தேசிய மக்கள் சக்தி இந்தியாவுக்கு சென்றிருந்தமைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விஜயத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் நாட்டின் பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக உலகில் எந்தவொரு நாட்டுடனும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கைகோர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தயங்குவதில்லை எனவும் ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உலக அதிகார அரசியலுக்கு பலியாகாது எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )