பொன்சேகாவால் கட்சிக்குள் முறுகல்

பொன்சேகாவால் கட்சிக்குள் முறுகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பல சமூக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்திருந்தார்.

மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும், கட்சியின் வேலைத்திட்டத்தையும் விமர்சித்திருந்தார். பொன்சேகாவின் கருத்துக்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக இருப்பதால், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், கட்சி என்ற ரீதியில் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியுள்ளனர். திலிப் ஜயவீரவுடனான சந்திப்பு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான உறவு என்பன கட்சியின் கோட்பாடுகளை மீறுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு சரத் பொன்சேகாவிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் இதன் போது கிடைக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )