
8 மணி நேரம் மாத்திரமே வட்டவளை வைத்தியசாலை இயங்கும்
வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரம் இருக்கின்ற மையினால், தொடர்ச்சியாக வைத்தியாசலையில் இயக்க முடியாது எனவும் , உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வைத்தியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் வரை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மாத்திரமே வைத்தியசாலை இயங்குமெனவும் அறிவித்தலை உள்ளடக்கிய சுவரொட்டி ஒன்றை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையின் முன்றலில் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி இவ் வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES செய்திகள்

