தினமும் புலிகளுக்கு ஒரு ரூபா வழங்கும் இலங்கை மக்கள்

தினமும் புலிகளுக்கு ஒரு ரூபா வழங்கும் இலங்கை மக்கள்

நாட்டில் உள்ள ஐம்பது வீதமான மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் டயஸ் போராக்களுக்கு நாளாந்தம் ஒரு ரூபாவையாவது பங்களிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்புகளே தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாக டெய்லி மிரருக்கு அவர் பிரத்தியேகமாக தெரிவித்தார்.

தான் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இந்த உண்மை தெரியவந்துள்ளது என்றார்.

பெரும்பாலான நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியினால் நடத்தப்படுகின்றன. அவர்கள் சேகரிக்கும் பணத்தை உள்ளூர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்ந்து வழங்குவது நாட்டுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

எனினும் பொலிஸாரின் முயற்சிகள் புலிகளாலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினராலும் முறியடிக்கப்படுவதால், இது பொலிஸாரால் கூட விசாரிக்கப்படுவதில்லை.

இதனால்தான் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உத்தேச சட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போருக்குப் பின்னர் நாடு எதிர்கொண்ட விளைவு, மக்களைக் கொன்று எந்தப் போரையும் தோற்கடிக்க முடியாது.

மேலும், யாரேனும் வாய்ப்பு அளித்தால் அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன் என்றார்.a

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )