பொல்லுகளுடன் பொலிஸ் அதிகாரம்; ஆயுதம் இல்லாத பொலிஸ் ; ரணிலுக்கு விக்கி ஆலோசனை

பொல்லுகளுடன் பொலிஸ் அதிகாரம்; ஆயுதம் இல்லாத பொலிஸ் ; ரணிலுக்கு விக்கி ஆலோசனை

தமிழ்நாடு பாண்டிசேரியில் ஆயுதம் இல்லாது பொல்லுகளுடன் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தியதாக விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

13ஆவது திருத்தச்சட்டத்தில் மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை நாம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம்.

அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்காக ஐந்து பேரின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்தோம்.

ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு இணங்கியதுடன், மேலும் 3 அல்லது 4 பேரை குழுவில் உள்வாங்குவதாகவும் கூறினார்.

பொலிஸ் அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது? ஏனைய அதிகாரங்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து புதன்கிழமை, கருத்து வெளியிட உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதங்கள் இல்லாத பொலிஸார் உள்ளனர். தடிகளை(பட்டன் பொல்லுகள்)மாத்திரமே அவர்கள் கையில் வைத்திருப்பார்கள்.

அவர்கள் போக்குவரத்து கண்காணிப்பு கடைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவுசெய்தல், சுற்றுச்சூழல் கடமைகளில் ஈடுபடுகின்றனர். ஆயுதங்கள் இல்லாது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது குறித்து விளக்கமளித்தேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அக்கறையுடன் செல்படுவதை அவதானிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )