
கறுப்பு ஜூலை இனப் படுகொலை நாள் கனடா பிரதமரின் குறிப்பை முற்றாக நிராகரித்த இலங்கை
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2023 ஜூலை 23ஆந் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை(கறுப்பு ஜூலை) நினைவு தினம் தொடர்பாக மேற்கொண்ட குறிப்பை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்தும் குறிப்பிடுவதானது, உள்நாட்டு வாக்கு வங்கித் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதாக அமைவதுடன், இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததாக மாட்டாது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கேட்டுக்கொள்கின்றது என இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

