
ரஷ்யாவுடன் போருக்குச் சென்றிருந்தால் எங்களுக்கும் அதிக டொலர் கிடைத்திருக்கும்
நாங்கள் ரஷ்யாவுடன் போருக்குச் சென்றிருந்தால், எங்களுக்கும் அதிக டொலர்கள் கிடைத்திருக்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஏற்புடையதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் வைத்திருப்பவர்களின் நிபந்தனைகளையோ அல்லது சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் நிபந்தனைகளையோ இலங்கையால் விதிக்க முடியாது என்று கூறிய அவர், இலங்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே முடியும் என்றார்.
சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்கிய நிலையில் இலங்கைக்கு சிறிய தொகையை பெற்றுக்கொள்ள முடிந்தது என எதிர்க்கட்சித் தலைவர் கூறியது சிறுபிள்ளைத்தனமான வாதம்.
அவர் கூறுவது போல் என்றால், நாங்களும் ரஷ்யாவுடன் போருக்குச் சென்றிருந்தால், எங்களுக்கும் அதிக டொலர்கள் கிடைத்திருக்கும்.எதிர்க்கட்சித் தலைவர் சிறுபிள்ளையாக இருப்பது இந்த நாட்டுக்கே இழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

