
மழைக் காலம்
கார்கால மல்லிகை
கணக்கின்றி
கருக்கட்ட
ஆரம்பமாயிற்று புதியதொரு
மழைக்காலம்.
இளங்காற்றில் மழைத்துமிகள் நம்
வீட்டுச் சாரல் வர மனதினிலோ
பெருங் கொண்டாட்டம்.
இதமான சுகம் நுகர்ந்திருக்கையில்
திடீரென்று பூமி இருள் வானம்
கவிழ்ந்து பூத்துறலாய் பெய்த மழை
பூதாகார உருவெடுத்து கொட்டித்தீர்த்தது.
ஐயிரண்டு நாளாகியும் அடித்த மழை
ஓயவில்லை வெள்ள நீர்
பெருக்கெடுக்க வீதி எல்லாம்
புதுக்குளங்கள்.
கண் அளக்கும் தூரம் எல்லாம்
சமுத்திரமாய் வயல் நிலங்கள்
நெருப்பு மூட்ட விறகின்றி
கடும் குளிரால் பற்கள்
தொடர்பின்றிக் கிடுகிடுக்க.
மழையோடு வந்து விழுந்த சிறு
நண்டுகளோடு மீன்களும் கூடவே
விளையாட அயல் வீட்டு நண்பர்களும்
அந்த தொடர் மழையில் கூட
தொலையாத மகிழ்சியை
மட்டுமே கண்டோம்.
புதுக்குளத்தின் சமுத்திரத்தில்
நீர்ப்பறவைகளாய் நீச்சலடித்த அந்த
அழகான மழைக்காலம் மீண்டும்
தூறலாய் எனக்குள்!
-தர்சினி
CATEGORIES இலக்கியம்