புலிகளின் ஆயுதங்கள் தற்போது தென்பகுதியில்; பாதாள உலகக் குழுக்களின் கைகளில் என்கிறார் அமைச்சர் டிரான் அலஸ்

புலிகளின் ஆயுதங்கள் தற்போது தென்பகுதியில்; பாதாள உலகக் குழுக்களின் கைகளில் என்கிறார் அமைச்சர் டிரான் அலஸ்

நாட்டில் பாதாள உலகக் குழுக்களினால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவையாவே உள்ளன.இந்நிலையில் விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளனவென பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தின் போது அரச தரப்பு எம்.பி. சஞ்சீவ எதிரிமானவினால் எழுப்பப்பட்ட ,நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. சடுதியாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளையும் அவை சார்ந்து இடம்பெறும் கொலைகளையும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?அவர்களிடம் ஆயுதங்கள் எவ்வாறு சென்றடைகின்றன என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அதிகமான சட்டவிராேதங்களின்போது பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் அதிகமானவை 30வருட யுத்தத்துக்கு பின்னர் வடக்கிலிருந்து தெற்கு பிரதேசங்களுக்கு வந்தவையாகும். அத்துடன் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தும்போது சட்ட விராேதமாக துப்பாக்கிகளும் எடுத்துவரப்படுகின்றன. அண்மையில் பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட 192 கிலாே ஹெராேயின் போதைப்பொருடன் 10 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் கைகப்பற்றப்பட்டிருந்தன.

தேடுதல், சுற்றிவளைப்புகளின் மூலமே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது .அத்துடன் போதைப்போருள் கடத்தல் மற்றும் கொள்ளைகளை தடுப்பதற்கு விசேட அதிரடிப்படைகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் யுத்தக்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நவீன ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பெறப்பட்டதா என்ற தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடமே இருக்கிறது. அத்துடன் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றால், ஆரம்பமாக அந்த துப்பாக்கி எங்கிருந்து வழங்கப்பட்டது என்றே நாங்கள் பார்ப்பாேம். அதன் பிரகாரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களில் அனுமதியளிக்கப்பட்ட துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )