ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அரசின் அடக்குமுறைச் சட்டத்தை தோற்கடிப்போம்

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அரசின் அடக்குமுறைச் சட்டத்தை தோற்கடிப்போம்

அடக்குமுறைகளை சட்டப்படி முன்னெடுக்கும் திட்டத்துடனேயே ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும், இதனை தோற்கடிப்பதற்காக நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த கட்சியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இது புதிய சட்டமல்ல. ஏற்கவே 1997இல் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்களை கொண்டுவந்து மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. 1997இல் அதனை கொண்டு வந்த போது அது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பின் 10ஆம் சரத்திற்கு முழுமையாக முரணானது என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதனை திருத்தங்களுடன் கொண்டுவர முயற்சிக்கிறனர். இது மக்களின் சுதந்திரங்களுக்கு எதிரானது. இந்த அதிகார சபைக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்கும் போது, அவருக்கு சார்பாகவே அந்த குழு செயற்படும். சண்டித்தணங்களால் முடியாத அடக்குமுறைகளை சட்டப்படி செய்வதற்காகவே இவ்வாறான சட்டத்தை கொண்டு வருகின்றனர். இதனை நிறைவேற்ற இடமளிக்க முடியாது. இதனால் இந்த சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் அழுத்தங்களை கொடுப்போம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )