ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் சஜித் காட்டில் ஒளிய நேரிடும்

ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் சஜித் காட்டில் ஒளிய நேரிடும்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் சஜித் பிரேமதாச கொங்கோ காட்டில் ஒளிந்து கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச யால காட்டில் பதுங்கியிருந்ததாக தெரிவித்த,ரங்கே பண்டார, இம்முறை யால காடு தமக்கு மறைவாக அமையாது என சஜித் பிரேமதாச உணர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும், இதனால் தேர்தலின் பின்னர் அவர் மறைந்திருக்கக் கூடிய விரைவில் காடு ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )