இனவழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணையை மட்டுமே ஏற்போம்; முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

இனவழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணையை மட்டுமே ஏற்போம்; முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் உட்படசிங்கள் பௌத்த பேரினவாதம் தமக்கெதிராக தொடரும் இனவழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணையையே தமிழ் மக்கள் எப்போதும் கோரி நிற்கின்றார்கள். அதற்குக் குறைவான எதையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை.பல்தேசிய சனநாயக முறைக்கூடு தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட துயர் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான ”மே 18” பெரும் துயர நாள் நேற்று வியாழக்கிழமை தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர்தேசங்களில் அனுஷ்டிக்கப்படட நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின்னால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மே 18, 2023 – முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என்றுமில்லாதவாறு எம் தேசம் இன்று ஆயுதங்கள் அற்ற பெரும் போரைஎதிர்கொண்டு நிற்க்கின்றது. இது நாளுக்கு நாள் விரிவடைந்து ஒவ்வொரு ஈழத்தமிழரின் வாசல் வரைக்கும் வந்துவிட்டது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புத் திணிப்பு பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. இவ்வாக்கிரமிப்புத்திணிப்பு, எம் இருப்பை உருக்குலைப்புச் செய்கின்றது. அதற்கெதிராகப்போராடுவதைத்தவிர தமிழர்களுக்கு வேறு வழிகளேதுமில்லை என்பதையும் இடித்துரைத்து நிற்கின்றது.

சிங்கள தேசம் தனது படை பலத்தை ஒன்றுதிரட்டி எம் பூர்வீகத் தாயகத்தை மிகச் செறிவாக இராணுவமயப்படுத்தி வருகின்றது.இராணுவ மயப்படுத்தலின் அடிநாதமாக இருப்பது, இராணுவவாத விழுமியங்களில்ஈழத்தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைப்பதாகும்.இராணுவமயமாக்கத்தின் நீட்சியாகவே போதைப்பொருள் பயங்கரவாதத்தை நோக்க வேண்டியுள்ளது. எம் தாயகத்தில் இளந்தலைமுறையினரை போதைக்குஅடிமையாக்குவதன் மூலம் ஆக்கிரமிப்பு அரசிற்கு எதிராக போராடுகின்ற விடுதலைமனநிலையில் இருந்து அவர்களை திசை திருப்புகின்றது.

எம் தாயகத்தில் மிக அண்மையில் அதிகரித்து வரும் மத முரண்பாடுகளையும், சாதியசிந்தனையின் எழுச்சியையும் ,சிங்கள அரசின் அல்லது சிங்கள அரசிற்குதுணைபோகும் சக்திகள் கையிலெடுத்துள்ள உத்தியாகவே நோக்க வேண்டியுள்ளது.

எனவே பூகோள, பிராந்திய பேரரசு கட்டமைப்பு முயற்சிகளைக் கையாள்வதில்தான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் இராசதந்திர பலம்தங்கியிருக்கின்றது.இனப்பிரச்சினைத் தீர்வில் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும்,கோரிக்கைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். அவையாவன:

  1. நினைவுகூரல் என்பது அடிப்படைஉரிமை சார்ந்தது மட்டுமல்ல

ஈழத்தமிழர்களின் பண்பாட்டு உரிமையும் கூட ஆகவே சிறிலங்கா அரசுஈழத்தமிழர்களின் நினைவுகூரல் உரிமையை ஒரு போதும் தடுக்க முடியாது,

  1. தமிழ் மக்கள் எப்போதும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் உட்படசிங்கள் பௌத்த பேரினவாதம் தமக்கெதிராக தொடரும் இனவழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணையையே கோரி நிற்கின்றார்கள். அதற்குக் குறைவானஎதையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை.
  2. தமிழர் தாயகத்தை வல்வழைப்புச் செய்யும், தாயகத்தில் தமிழ் மக்களின்குடிப்பரம்பலைப் பலவீனமாக்கும் எந்த முயற்சியையும் சிங்கள-பௌத்தபேரினவாதம் எம்மீது தொடுத்துள்ள இனவழிப்புப் போரின் ஒரு அங்கமெனவேநாங்கள் எப்போதும் கருதுகின்றோம்.
  3. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின்தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாதசுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.
  4. பல்தேசிய சனநாயக முறைக்கூடு தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுஎட்டப்பட வேண்டும்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )