
தமிழக காவல்துறையினரால் நளினிக்கு அனுமதி மறுப்பு!
தனுஷ்கோடியில் நேற்று நடைபெற்ற ‘மே 18’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்ட போதும், யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நளினிக்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவரால் அந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.
இதையடுத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விடுதலையான நளினி மற்றும் முருகன், தனுஷ்கோடி கடலில் இறங்கி விட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகள் சிறையில் கழித்த நளினி வேலூர் சிறையில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த பெண் கைதியாவார்.
இந்திய உயர் நீதிமன்றத்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த நளினி உட்பட ஆறு பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நளினி தமது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இன்று காலை ராமேஸ்வரம் சென்றிருந்த நளினி தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்று சுற்றுலா பயணிகள் மத்தியில் கடலில் இறங்கி புகைப்படமும்எடுத்துக் கொண்டார்.
தமிழர் கட்சி சார்பில் தனுஷ்கோடியில் நடைபெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டார்.
எனினும், யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நளினிக்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
உத்தரவை மீறி நினைவேந்ததில்ல பங்குபற்றினால் தான் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நளினி, தனுஷ்கோடியில் நினைவேந்தல் நடைபெறும் பகுதிக்கு செல்லாமல் கடற்கரையில் இறங்கி விட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
நளினி மற்றும் முருகன் தனுஷ்கோடி வந்து கடற்கரையில் இறங்கியமை மற்றும் அவர் சந்திந்த நபர்கள் உள்ளிட்ட அவரது நடவடிக்கைகளை கியூ பிரிவு காவல்துறையினர் உன்னிப்பாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

