கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை அளவிடுவது இடைநிறுத்தம்

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை அளவிடுவது இடைநிறுத்தம்

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை தொல்லியல் திணைக்களம் தம்வசப்படுத்தும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை அளவீட்டுப் பணிகள் நடைபெறவிருந்த நிலையில் மக்கள் அங்கு திரண்டதால் அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது.

கிளிநொச்சியின் மிகவும் பழமை உருத்திராபுரீஸ்வரர் ஆலயத்தின் காணியை தொல்லியல் திணைக்களத்திற்காக அளவீடு செய்வதற்காக கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஆலய நிர்வாகத்தினர் நேற்று ஆலய வளாகத்தில் ஒன்று கூடியதால் தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளுக்கு வருவதை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பழமை வாய்ந்த உருத்திரபுரீஸ்வரர் சிவன் ஆலயம் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

திராவிட கட்டடக்கலைமரபில் அமையப்பெற்ற இவ்வாலயத்தில் காணப்படும் சதுர ஆவுடை இலிங்கம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது.

சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டுள்ளது.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குறிவைத்து கிளிநொச்சி உருத்திரபுரேஸ்வரர் ஆலயத்தின் காணி அளவீட்டை மேற்கொள்ள தொல்லியல் திணைக்களம் முயல்வதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சாட்டினார்.

உருத்திரபுரேஸ்வரர் ஆலயத்தில் இன்று (18 ஆம் திகதி) தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம். எமது உறவுகள் உயிர் நீத்த தினமாகும். இன்றைய நாளில் நாம் அனைவரும் அவர்களை நினைவு கூருவதற்காக முள்ளிவாய்க்காலில் நிற்க வேண்டும்.

ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் அடாத்தான, மிலேச்சத்தனமான செயற்பாடுகளால் நாம் இன்று(நேற்று) கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வத்தில் நிற்கின்றோம்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களமானது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் வகையிலும், தமிழ் மக்களோடு நிரந்தர பகைமையை ஏற்படுத்தும் வகையிலும் செயற்படுகின்றது.

நீங்கள் செய்வது சட்டவிரோத செயல். நீங்கள் செய்வது புத்தருக்கும் பொறுக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )