கர்தினால் என்ன பிரதம நீதியரசரா?; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

கர்தினால் என்ன பிரதம நீதியரசரா?; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதிமன்றம் அல்லது பிரதம நீதியரசருக்கே உண்டு எனவும் கர்தினால்களுக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் தமது கட்சி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதிமன்றம் அல்லது பிரதம நீதியரசருக்கே உண்டு என்றும் கர்தினால்களுக்கு அல்ல எனவும் அபராதம் செலுத்தாவிட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் எப்போது நடக்குமென்பது எவருக்கும் தெரியாது. எப்போது தேர்தல் வரும், எந்த மாதிரியான தேர்தல்கள் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. குறிப்பாக ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு அவற்றை முடிவு செய்யும். நாங்கள் அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )