இந்தியா சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செயற்படவேண்டும்

இந்தியா சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செயற்படவேண்டும்

இந்தியா சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செயற்படவேண்டும்.இதன்மூலம் இந்தியா சீனாவின்முதலீடுகளை இலங்கை பெறவேண்டும்அதேவேளை இலங்கை அதிகளவு அதிகாரத்தன்மை கொண்டதாக காணப்பட்டால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காக வேறு நாடுகளிற்கு செல்வார்கள் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் . முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளிநாட்டு நாணயங்களிலேயே மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும்.சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை நோக்கி திருப்புவது என்றால் இரண்டு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.அதில் முதலாவது அதிகாரத்துவ முறைமை. இதனை இலகுவானதாகவும் எளிமையானதாகவும் மாற்றவேண்டும்.

இலங்கைக்கு முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்கள் வரும்போது அவர்கள் 15 அமைச்சுகளிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படக்கூடாது. அவர்கள் ஒரு இடத்திலேயே முதலீடு தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் நிலைமை காணப்படவேண்டும்.

அதுமட்டுமன்றி இந்தியா சீனாவுடன் இலங்கை நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும்,உலகின் 80 வீதமான சோலர் பனல்கள் மின்சார பற்றறிகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன உலகின் 74 வீதமான மின்சார கார்கள் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும்.அதானி நிறுவனம் மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை ஆரம்பிக்கும் யோசனையை முன்வைத்துள்ளது,மேலும் திருகோணமலையில் சூரிய மின்சக்தி திட்டம் ஒன்றிற்கான யோசனையும் காணப்படுகின்றது.

இலங்கை இதனை பயன்படுத்தி இந்தியா சீனாவின் முதலீடுகளை பெறவேண்டும் .
சீனாவின்கடன்மறுசீரமைப்பிற்கான உறுதிமொழி போன்றவை காரணமாக இலங்கை எதிர்காலம் குறித்து சிந்திக்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளது .அரசாங்கம் உரியகொள்கைகளை உருவாக்காவிட்டால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காக வேறு நாடுகளிற்கு செல்வார்கள்.சர்வதேச நிறுவனங்களால் பல நாடுகளில் முதலீடு செய்ய முடியும். இலங்கை அதிகளவு அதிகாரத்தன்மை கொண்டதாக காணப்பட்டால் அவர்கள் வேறு நாடுகளிற்கு செல்வார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )