
திறைசேரியின் கையில் இனித் தேர்தல் திகதி
திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த முடியாது என அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 25ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தலை முதலில் மார்ச் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்கப்படாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது முறையாக இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிதி நெருக்கடி காரணமாக காலவரையறையின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே திறைசேரி நிதி ஒதுக்கிய பின்னர் அல்லது உயர் நீதிமன்றத்தினால் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

