அன்று மஹிந்த இருந்த இடத்தில் இன்று ரணில்!

அன்று மஹிந்த இருந்த இடத்தில் இன்று ரணில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்த இடமே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இன்று ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஜனாதிபதியாக்கப் போராடுவதாகவும் அவர் கூறுகிறார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ரணில் விக்கிரமசிங்கவின் தோளில் தொங்கி ஆட்சிக்கு வருவதே அந்த குழுவினரின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்தார்.

அப்போது ரணிலை விரட்டியடிக்கப் போராடியவர்களே ரணிலை மீண்டும் இப்போது ஜனாதிபதியாக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் விஜயலால் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )