வீடு

வீடு

                     

(அஜந்தி)

கைபேசியில் மணி ஒலிக்க, படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்பாவின் குரல்..
“எணிணிஞீ ட்ணிணூணடிணஞ்! “
“எணிணிஞீ ட்ணிணூணடிணஞ் அப்பா!”
“எழும்பிட்டியாடா?”
“முழிச்சிட்டன்… இன்னும் கட்டிலை விட்டு எழும்பல்லை… இடமாற்றமோ அல்லது நேர வித்தியாசமோ தெரியல்ல… ரெண்டு நாள் சரியான நித்திரை இல்லை… ராத்திரி ஓரளவு பரவாயில்லை”
“சரி அப்பு …இன்றைக்கு அந்த லோயரைப் போய்ப் பார்…எல்லா விவரமும் அவரிட்டை வடிவாகச் சொல்லி இருக்கிறேன்… போகேக்கை மறக்காம
அந்த உறுதியையும் கையோடை கொண்டு போ….”
“சரியப்பா….”
“வீடு வாங்கிறவரும்… அங்கை வருவார்…..அவற்றை பேருக்கு.. மாத்தி எழுதி உறுதி முடிக்கிறது….. குடுக்கல்….. வாங்கல்.. எல்லாம் லோயர் பாத்துக் கொள்ளுவார். காசைக் கையில கொண்டு திரியாமல்…உடனேயே
அங்கை உள்ள என்ரை எக்கவுண்டுக்கு டிபோசிற் பண்ணி விடு..”
“ஓமப்பா….”
“வேறை என்ன? உடம்பை பார்த்துக் கொள்…… உங்கை எல்லாம் வசதியாக இருக்கா?”
“எல்லாம் ஓகே! ஆனா அம்மா போட்டுத்தாற காப்பி மட்டும் மிஸ்ஸிங்! “
“சரி! சரி! அம்மாட்ட சொல்லுறன்…எல்லா அலுவலும் முடிஞ்ச உடனை… போன் ..பண்ணு.. ஞதூஞு!!”
“ஆதூஞு’ “

அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பிள்ளை. பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்றது, இன்று நல்லதொரு உத்தியோகம் பார்த்துக் கொண்டிருப்பது எல்லாமே லண்டனில் தான். நான் பிறப்பதற்கு முன்னமே அம்மா, அப்பா
யாழ்ப்பாணத்தை விட்டு, புறப்பட்டு லண்டனுக்கு வந்து விட்டார்கள்.

என்னுடைய சின்ன வயசில், சிலதடவைகள் அவர்களுடன் யாழ்ப்பாணம் வந்து, இங்கே அப்பாவுக்கு சொந்தமான மானிப்பாய் வீட்டில் தங்கித் திரும்பியிருக்கிறோம். வீட்டைச் சுற்றி தென்னை, மா, பலா போன்ற மரங்கள். பின் பக்கம் பெரிய வளவு. அங்கே ஒரு நெல்லி மரமும் இருக்கிறது.

அந்த வீட்டை விற்பதற்குத்தான் இப்பொழுது என்னுடைய யாழ்ப்பாண வருகை. இலண்டனில் உள்ள வீடுகளைப் பார்த்துப் பழகிய எனக்கு, ஊரிலுள்ள இந்த வீடுகளைப் பார்க்கும் போது முற்றிலும் வித்தியாசமாகத் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்வேன். இந்த வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நேரங்களில், என்னவென்று புரியாத,
இலண்டனில் என்றுமே அனுபவித்திராத சுகமான உணர்வொன்று
மனசுக்குள் பரவி என்னை ஆனந்தப் படுத்தியிருக்கிறது. எந்தவித கட்டுப்பாடுமில்லாத சுதந்திரமொன்று எனக்குப் பரிசளிக்கப்பட்டது போன்றதொரு பரவசத்தில் நான் திளைத்ததும் உண்மை.

ஊரின் பெருமைகள் பற்றி அம்மாவும், அப்பாவும் பேசிக் கொள்வதன் காரணமும் இதுதானோ? இருக்கலாம்.

இடையில் அப்பா மட்டும் ஊருக்கு வந்து, தன் பெயரில் இருந்த வீட்டை என் பெயருக்கு மாற்றி எழுதி வைத்தார்.
“உன்னைத் தவிர எங்களுக்கு வேறை ஆரடா? ஒரு நேரம் நீ விருப்பப்பட்டா, ஊரிலை போய் அந்த வீட்டில் இருக்கலாம் தானே?” என்று அடிக்கடி சொல்லியும் கொள்ளுவார். லண்டனிலையே பிறந்து, வளர்ந்ததாலையோ என்னவோ, என் மனசில்ல அப்படி ஒரு ஆர்வம்
என்றைக்கும் ஏற்பட்டதில்லை.

தவிர, நான் வளர வளர அவ்வப்போது ஊரைப்பற்றி கேள்விப்படுகின்ற செய்திகள் திகிலூட்டும். அவற்றின் உச்சக்கட்டமாய், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதிக்கட்ட போர் என்று அங்கே நடத்தப்பட்ட இனவழிப்பு!!

நான் ஊரோடு போய் நிரந்தரமாக வசிப்பேன் என்று அப்பாவுக்கிருந்த
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும், இதன் பிறகு முற்றாகவே இல்லாமல் போய்விட்டது. எனவே தான் மானிப்பாயில் இருக்கும் வீட்டை விற்பதற்கு முடிவெடுத்து, அதற்குரிய எல்லா ஒழுங்குகளும் செய்து, என்னை இப்போது யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

                          ***

ஏற்கனவே குண்டு வீச்சுகளினால் ஓடுகள் உடைந்து, சுவர்களில்
குண்டு பாய்ந்த துளைகளும், இடிந்த சுவர்களுமாயிருந்த மானிப்பாய் வீடு, கவனிப்பார் இல்லாமல் மோசமாகிக் கிடந்தது. ஒரு அறையும்
குசினியும் சேதம் எதுவுமில்லாமல் தப்பிப் பிழைத்துக் கிடந்தன.

      இந்த  வீடு மட்டுமல்ல...

நான், கொழும்பிலிருந்து யாழ் நோக்கி ஓரு சொகுசு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பகல் பொழுதில், வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வரை பெரும்பாலான வீடுகள் இதே நிலையில்தான் இருப்பதைக் கண்டேன்.
…இடிந்தும்… சிதிலமடைந்தும்…கூரைகளே இல்லாமலும்…அப்படி உடைந்த வீடுகளிலும் சிலர் குடியிருப்பதையும் கண்டேன்.. அவர்கள் வேறென்ன தான் செய்ய முடியும்? எங்கே போவார்கள்?
அவர்கள் கூட பரவாயில்லை. போரினால் தங்கள் வீடுகளைப் பறி கொடுத்து இருக்க இடமில்லாமல் ஆதரவற்றுத் தவிக்கும் எத்தனையோ குடும்பங்கள் பற்றியும் செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன்.

ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ள, அப்படிப்பட்ட மக்களை நேரில் பார்த்து, அவர்களுடைய துன்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாகவே எனக்குள் இருந்த ஒரு ஆதங்கத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு தருணமாகவும் இப்பொழுது நான் யாழ் வந்திருப்பதைக் கருதி, இன்று அந்த லோயரிடம்
போவதற்கு முன் இங்கேயுள்ள அப்படிப்பட்ட இடங்களுக்கும் போய்வரத் தீர்மானித்தேன்.

                       ***

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!!
ஒரு போரின் விளைவினால் இத்தனை அவலங்களா?
யுத்தக் கொடுமையின் நேரடி சாட்சிகளாய், துன்பக் கதைகளைச் சுமந்தபடி…..அத்தனை பேரும்….

அங்கவீனமாக்கப்பட்டு…… மனநலம் பாதிக்கப்பட்டு……. பெற்றவர்களைப் பறி கொடுத்து….. பிள்ளைகளைத் தொலைத்து….. கணவனை
இழந்து, மனைவியை இழந்து, மொத்தக் குடும்பத்தையும் குண்டு
வீச்சுக்கு இரையாக்கித் தனியாளாக்கப்பட்டு….,வீடு வாசல்களை எல்லாம் இழந்து…. இன்னும்.. இன்னும்.. பல உயிர்வதைகளுக்கு முகம் கொடுத்தவர்களாய்……..

முப்பது வயசை அண்மித்துக் கொண்டிருக்கும் நான், கற்பனையில் கூட இதுவரை கண்டிராத ஒரு சூழலை நேரில் தரிசிக்க நேர்ந்த போது அதிர்ந்து போய்விட்டேன்.
இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம்.

இதயக் கூட்டுக்குள் ஒரு பாறாங்கல் வந்து உட்கார்ந்து கொண்டது போல உணர்ந்தேன்.
போர் எந்த எல்லை வரைக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைக் கொண்டு போகுமா? கடவுளே!!
அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தாண்டி, முதன் முதலாய் என்னுள்ளே கேட்ட ஒரு குரல் என்னை உலுக்கியது!
‘இவர்கள் தமிழ்மக்கள்…. இவர்களும் நானும் ஒரே இனம்….. இவர்கள் எல்லாம் என் தாய் நிலத்து உறவுகள்…’
…தாயாய், தந்தையாய், தாத்தாவாய், பாட்டியாய், அண்ணனாய், தம்பியாய், அக்காவாய், தங்கையாய்,….. இன்னும் எனக்கு நெருங்கிய உறவுகளாய் அங்கே எல்லோரும் எனக்குத் தெரிந்தார்கள்.

நெகிழ்ச்சி நிரம்பிய உணர்ச்சிக் கொந்தளிப்பில், என் மனம் அவர்களை அரவணைத்துக் கொண்டது.. அரைக் காற்சட்டை மட்டும் போட்டபடி, அம்மாவைக் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன். பத்து வயதிருக்கும்.
“தம்பி ஸ்கூலுக்கு போகேல்லையா.?”
‘இல்லை! ‘ என்று தலையாட்டினான்.
“தம்பி..! அந்தப் பெரிய சண்டை நடந்த நேரம்தான் இவன் பிறந்தவன். எங்கடை இடம் வன்னி. இப்ப வீடுமில்லை., வாசலுமில்லை. மாறி மாறி இப்படி முகாம்களிலை இருக்கிறம்.. ஆரோ புண்ணியவான்கள்
எங்களுக்குச் சாப்பாடு தருகினம்.! இவனைப் பள்ளிக்கு எப்படி விடுறது…? ” தாயின் பதில் இது.

ஒரு கணவன் மனைவி. கணவனுக்கு வலது பக்கம் முழங்காலுக்கு கீழே கால் இல்லை. குழி விழுந்த கண்களுடன் மெலிந்த தோற்றத்தில் மனைவி.
“இவர் துணைப்படையிலை இருந்தவர். 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஒரு சண்டையில கால் இல்லாமல் போச்சு. அந்த நேரம் ஆஸ்பத்திரியள் ஓரளவு இயங்கினதாலை, பிரச்சனை இல்லாமை காயம் ஆறிட்டுது…… மே மாதத்துக்குப் பிறகு ரெண்டுபேரும் வவுனியா ‘காம்ப்’பிலை இருந்து படாத பாடெல்லாம் பட்டம்….. பிறகு ஒருமாதிரி வெளியில வந்திட்டம்…. எங்கட வீடும் போய், பிழைப்பும் போய்….. அநாதரவா நிற்கிறம்…”

இதே போல வேறும் ஒன்றிரெண்டு பராமரிப்பு முகாம்களுக்குப் போய் அங்கும் பல்வேறு துன்பக் கதைகளைக் கேட்டபின் திரும்பிக் கொண்டிருந்தோம். வண்டியின் ஓட்டுனரும் எல்லா இடமும் என் கூடவே வந்திருந்தார். நீண்ட நாளாகவே அப்பாவுக்கு மிகவும் தெரிந்த ஒருவர் அவர்.
மாலை நாலு மணியாகிக் கொண்டிருந்தது.

“லோயர் வீட்டுக்குத் தானே தம்பி?” ஓட்டுனர் கேட்டார்.
“இல்லையண்ணை…. இப்ப வேண்டாம்… பிறகு பார்ப்பம்.. இப்ப ஹோட்டலுக்கு போவம்!”

குளித்து, உடை மாற்றி, உணவு முடித்து அறையில் வந்து உட்கார்ந்தேன்.
பலவகை எண்ணங்களும் மாறி மாறி வந்து நினைவில் மோதிப் பிரிந்தன. விடுதலைப் போராட்டத்தின் அவசியம் பற்றி இது நாள் வரைக்கும் நான் எண்ணிப் பார்த்திராத எனக்குப் புரியாமல் இருந்த சில உண்மைகள் தெளிவாகின. சில தொடர்ந்தும் புதிராகவே இருந்தன. எது எவ்வாறாயினும், ஏதோ ஒரு முடிவை எடுப்பதற்கு இன்னும்
சொல்லப் போனால் ஏதோ ஒன்றைச் செய்வதற்கு என் உள் மனம் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

மாலையில், ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் என்னிடம் சொன்ன ஒரு விடயத்தை இப்போது மனம் மீள் பதிவு செய்து
பார்க்கிறது.

வசாவிளானில், சொந்த வீட்டில் குடியிருந்து, சொந்த நிலத்தில் பயிர் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பம். வீடும் நிலமும்
இராணுவத்தின் வசமாகிவிட, கடந்த சில வருடங்களாக மானிப்பாயில் தெரிந்தவர்களின் வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். அவர்களை இனியும் தங்கள் வீட்டில் இருக்க அனுமதிக்க முடியாதென்று, வேறிடத்துக்கு போகும்படி சொல்லி விட்டார்கள்.

இரண்டு பிள்ளைகள், தாய் தகப்பன், இன்னும் சில மாதங்களில் மூன்றாவது குழந்தையும், பிறக்க போகிறது.. ஓட்டுனர் என்னிடம் சொன்ன அந்த வார்த்தைகள்….
“தம்பி, அந்த ஆள் எனக்குத் தெரிஞ்சவர்….கொஞ்ச நாளாகவே வீடு
தேடி அலைஞ்சு கொண்டிருக்கிறார். ஆருமே இவையளுக்கு
இடம் குடுக்க விரும்பலை. ஏனென்றால இவையளால அவை
எதிர்பார்க்கிற வாடகை குடுக்க முடியாதென்று தெரியும்…..

…….சொந்த இடத்தை விட்டு வந்து, அகதியாய்
சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவை, ஆயிரக் கணக்கிலை
வீட்டு வாடகை குடுக்க எங்கே போவினம்?…… ரெண்டு நாளைக்கு முந்தி அந்த மனிசன் இதையெல்லாம் என்னட்ட சொல்லி அழுதிட்டுது. ..தம்பி!!… உதவி செய்யுற நிலையில் நானில்லை எண்டு கவலையாய் இருக்கு….”
‘சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறவை ஆயிரக்கணக்கிவை வாடகை குடுக்க எங்கே போவினம்?’
மனசுக்குள் தெளிவான முடிவொன்று பிறக்கிறது.
எங்களால முடிஞ்ச ஏதாவதொண்டைச் செய்ய வேணும்!

எனது முடிவை அப்பாவுக்கு சொல்ல நினைக்க, அவர் போன்
எடுக்கிறார்.
“என்னடா? உன்ரை போன் வரும் வருமென்று பாத்துக்
கொண்டேயிருந்தேன்….. இப்ப உங்கை பத்து மணியும் ஆகப் போகுது
என்ன நடந்தது?… லோயரிட்டை போனியா?…..இவ்வளவு நேரமும் ஏன் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாய்…?”
“நான் லோயரிட்டை போகேல்ல அப்பா”
“ஏன் போகேல்லை?…. ஏதும் பிரச்சனையே?..”
“ஒரு பிரச்சனையும் இல்லை….. வீட்டை விற்க வேண்டாமென்று பாக்கிறேன் “
“ஏன் தம்பி….? ஓ…! விக்காம இருந்தா ஒரு காலத்திலை நீ போய் இருக்கலாம்னு மனம் மாறிட்டுதோ? அப்படியென்டா, அதை விட எங்களுக்கு வேறை என்ன சந்தோசம்….?”
அப்பாவின் குரலில் புதிய உற்சாகம்.
“இல்லையப்பா.. சொல்லுறன்..”
போரில் பாதிக்கப்பட்டவர்களை வெவ்வேறு இடங்களில் போய் பார்த்ததையும், ஓட்டுனர் மூலமாக அறிந்த அந்தக் குடும்பம் பற்றியும் சொன்னேன்.
“சொந்த வீடுகளைப் பறி குடுத்திட்டு, வாழ வழி தெரியாம எவ்வளவு சனம் இங்கை கஷ்டப்படுகினமென்று இங்கை வந்து பாத்தபிறகுதானப்பா
தெரிஞ்சுது.. எல்லோருக்கும் உதவி செய்ய முடியாட்டியும் ஒரு குடும்பத்துக்கு எண்டாலும், எங்களாலை முடிஞ்சதை செய்ய வேண்டுமென்று மனம் சொல்லுதப்பா”
நானே தொடர்ந்தேன்.
“இன்னும் சில மாதங்களிலை குழந்தை கிடைக்கப்போற ஒரு பொம்பிளை…. ரெண்டு பிள்ளையள்….., தகப்பன்…. குழந்தை பிறக்கிறதுக்கு
முதல் வீட்டை விட்டிட வேணும் எண்டு வீட்டுக்காரர் கண்டிப்பா சொல்லீட்டினமாம்…! உடனடியா வீட்டை விட்டுப் போறதெண்டா
எப்பிடியப்பா?….. கஷ்டம் தானே? ஓடித்திரிஞ்சு ஒரு இடமும் கிடைக்கேல்லையெண்டு அந்த மனுசன் எங்கடை ட்ரைவரிட்டை சொல்லி அழுதாராம். யோசித்துப் பார்த்தன்… அந்த குடும்பத்தை எங்கடை
வீட்டில இருக்க விட்டா இந்த நேரம் இது அவைக்கு ஒரு பெரிய உதவியாக இருக்குமென்று மனம் சொல்லுது…அந்தப் பையனும், படிப்பு குழம்பாமை ஏதோ படிச்சு வந்துடுவான்….. எங்கடை பின் வளவுக்கை கூட ஏதும் பயிர் வைக்கலாம்.”
“………………………………”
“என்னப்பா ஒண்டுமே சொல்லாமல் இருக்கிறியள்…?”
“என்ன தம்பி சொல்ல?… உன்ரை நினைப்பு நல்லதுதான்….ஆனா,
அதிலை சில சிக்கல்கள் இருக்கு”
‘என்ன சிக்கல்…..?”
“தொடர்ந்து இருக்க விட்டா அவை பிறகு எழும்ப மாட்டினம்..”
“எழும்பாட்டி என்னப்பா?…. நீங்களும்,அம்மாவும் வந்து அந்த வீட்டிலை
இருக்கப் போறியளா? அல்லது நான் வந்து இருக்கப் போறனா?”
“அதுக்கில்லையடா….”
“கனக்க யோசிக்காதேங்கோ. அவைக்கு சொந்த வீடும் நிலமும் இருக்கு.. ஒரு நேரம் நாட்டு நிலமை சரி வந்தா அவை அங்க போயிடுவினம். அதுக்குப் பிறகும் இது போலை ஆருக்காவது எங்கடை வீடு பயன்படுமென்றா அது நல்லது தானே அப்பா?”
“ம்… நீ சொல்லுறதும் சரிதான்..”
“பின்னை என்னப்பா? அவனவன் நாட்டுக்காக
உயிருகளைக் குடுத்துப் போய்ச் சேர்ந்திட்டாங்கள்.. நாங்கள் என்ன செய்தம்.?….ச்t டூஞுச்ண்t , ஒருவீடு. நினைச்சுப் பார்த்தா இந்த வீடு ஒரு தூசிக்குச் சமம். அல்லது ஒண்டும் இல்ல என்று கூடச் சொல்லலாம். இதையாவது செய்யாட்டி நாங்கள் மனுசரே இல்லையப்பா.. என்ன ஓகே தானே..?”
“ம்…. சரி அப்பு…. உன்ர விருப்பப்படியே செய் ராசா…!!”
“எணிணிஞீ…..!! tடச்ணடுண் அப்பா!! ,அம்மாட்டையும் இதை சொல்லி விடுங்கோ. நாளைக்கு ட்ரைவரோடை போய் அந்த குடும்பத்தை நேர்ல சந்திச்சு, அவை கவலைப்படாமை எங்கட வீட்டிலை வந்து இருக்கலாமென்று . சொல்லப் போறன்..”
” வீட்டைத் திருத்த டிரைவர் மூலமாக ஆட்களை ஒழுங்கு செய்திட்டா சரி…..”
“எப்படியும் ஒரு கிழமைக்குள்ளை அங்கை வந்து விடுவனப்பா…. tச்டுஞு ஞிச்ணூஞு!”
“சரி தம்பி!…. நீயும் கவனமய்யா!!”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )