11 மாதங்களில் 497 கொலைகள் ; 3596 கடத்தல்கள்

11 மாதங்களில் 497 கொலைகள் ; 3596 கடத்தல்கள்

இந்த வருடத்தில் நவம்பர் இறுதி வரையிலான 11 மாதங்களில் 497 கொலைச்  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபர தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரதுறை மற்றும் புள்ளிவிபர கற்கை பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இவற்றில் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களே அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி 11 மாதங்களில் இடம்பெற்ற கொலைச்  சம்பவங்களில் 223 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் இறந்தவர்கள் என்று பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் கப்பம்  கோரல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 3596 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் கடத்தல் சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி 2021 ஆம் ஆண்டில் 835 கடத்தல் சம்பவங்களே பதிவாகியுள்ள நிலையில், இந்த வருடத்தில் 11 மாதங்களில் 3596 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )