
இராணுவ அதிகாரி மீதான தடையால் அமெரிக்காவுடன் மோத மாட்டோம்
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இராணுவ அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ,
இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை.இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும் .ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது
அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர்.இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை.அதோடு நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

