குடும்பத்துடன் அமெரிக்கா   பயணமான கோத்தாபய

குடும்பத்துடன் அமெரிக்கா   பயணமான கோத்தாபய

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது குடும்பத்துடன் அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.55 மணியளவில் கோத்தாபய ராஜபக்‌ஷ, மனைவி அயோமா ராஜபக்‌ஷ அவர்களின் மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்கா நோக்கி பயணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்று, பின்னர் டுபாயில் இருந்து அமெரிக்கா நோக்கி அவர் பயணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த போது தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, கடந்த ஜூலை 13 ஆம் திகதி மாலைதீவு ஊடாக சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்‌ஷ, சிங்கப்பூரில் இருந்து தனது ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை விடுத்திருந்தார். பின்னர் சிங்கப்பூரில் இருந்து ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றார்.

அவர் குறித்த நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவருக்கு அந்நாட்டுக்கு பயணிக்க வீசா கிடைக்காத காரணத்தினால் மீண்டும் இலங்கை திரும்ப நேரிட்டது. இதன்படி செப்டம்பர் 2ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து பொது இடங்களுக்கு செல்லாது பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்த கோத்தாபய ராஜபக்‌ஷவும் அவரின் குடும்பத்தினரும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்கா  பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )