
மாவீரர் வாரம் நெருங்கும் நிலையில் கெடுபிடி; காரணம் குறிப்பிடாது விசாரணைக்கு அழைப்பு
மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் காரணம் தெரிவிக்காது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு பொலிஸ் கட்டளையோ அல்லது பதவி முத்திரையோ இன்றி வெள்ளை தாளில் எழுதி இவ்வாறான உத்தரவை பொலிஸார் கையளித்துச் சென்றனர்.
ரவிகரன் மற்றும் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோர் வீடுகளுக்கு சென்று இந்த முகவரியற்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

