
புலிகளை வீழ்த்தியது எமது ஆயுதங்களே; பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் தகவல்
தங்களது நிறுவனத்தின் ஆயுதமே விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ள ‘டோவ்ன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘டோவ்ன்’ மேலும் தெரிவித்துள்ளதாவது;
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றன.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின எனத் தெரிவித்துள்ளார்.
எங்கள் இராணுவத் தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் டோவ்ட்சன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

