ஐ.நா.வில் கூறுவதொன்று இலங்கையில் நடப்பது வேறொன்று

ஐ.நா.வில் கூறுவதொன்று இலங்கையில் நடப்பது வேறொன்று

ஐ.நா பொதுச் சபையில் சமீபத்தில் கருத்து சுதந்திரத்தை “புனிதமானது” என்று இலங்கைகூறியிருந்தநிலையில் , ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்ததற்காக இந்த வார இறுதியில் கொழும்பில் டசின் கணக்கான எதிர்ப்பாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்

சனிக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா .பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, “நாம் அனைவரும் புனிதமானதாகக் கருதும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை ஒருவருக்கு உள்ளது என்பதை நாங்கள் நிபந்தனையின்றி அங்கீகரிக்கிறோம்.” என்று கூறியதுடன் , “இருப்பினும், இந்த சுதந்திரம் அரசியலமைப்பு ஒழுங்கிற்குள் இருக்க வேண்டும் என்பதும் மெச்சப்பட வேண்டும், மேலும் சட்டத்தின் வரம்புகளுக்குள் தன்னை வெளிப்படுத்துவது தொடர்பாக ஒருவரின் அடிப்படைக் கடமையைக் கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட வேண்டும்.”என்று கூறியிருந்தார் .

அதே நாளில்,பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிரான அரச “அடக்குமுறைக்கு” எதிராக சோசலிஸ்ட் இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 84 பேரை பொலிஸார் கைது செய்த னர் . அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களை “உயர் பாதுகாப்பு வலயங்கள்” என்றுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்த ஒரு தினத்திற்கு பின்பு , போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீதாரை களை பொலிசார் கட்டவிழ்த்துவிட்ட பின்னர்அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தனது உரிமைகள் தொடர்பான பதிவுகளைநியாயப்படுத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மன்றத்தில் வெளியுறவு அமைச்சரின் உறுதிமொழிக்கு முரணான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, உரிமை அமைப்புகளும் அரசாங்க விமர்சகர்களும் கைதுகளை கடுமையாக சாடியுள்ளனர். “குறைந்தது 84 அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்ததன் மூலம், இலங்கை அதிகாரிகள் எதிர்ப்பின் மீதான சகிப்புத்தன்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த அமைதியான எதிர்ப்பாளர்கள் அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர் ”என்றுசர்வதேச மன்னிப்புசபை சனிக்கிழமை கூறியிருந்தது .

ஆழ்ந்த கவலை

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நியமனத்திற்குப் பின்னர், இந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னணியில் இருந்த பல ரை இலக்கு வைத்து, அரசாங்கத்தின் “சூனிய வேட்டை” ஒன்றைக் காண்பிக்கும் இந்த மாற்ற ம் மீண்டும் இலங்கையின் உரிமைகளுக்கானசெயற்பாட் டாளர் கள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மூன்று மாணவர் தலைவர்கள், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர் அவர்கள் கைது செய்யப்பட்டமை “அச்சம்தருகின்ற” தெ ன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்உயர் ஸ்தானிகர் கூறியிருந்ததுடன் அது உலகளாவியரீதியில் கண்டனத்தைஏற்படுத்தியிருந்தது .

இதற்கிடையில், உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் தலைநகரில் புதிய உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய ஜனாதிபதியின் உத்தரவு – வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் பல ஆண்டுகளாக , அதிகளவுக்கு இராணுவமயமாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களுடன் போராடுகின்றநிலையில் விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளைஇதுதொடர்பாக “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையின் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவில் “கடுமையான” விதிகள், “கருத்து சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சுதந்திரத்தை மீறுதல் நடமாடும் சுதந்திரம் ஆகியவை அடங்குமென்றும் இவை அனைத்தும் கருத்து வேறுபாடு கொள்ளும் மக்களின் உரிமையின் முக்கிய அம்சங்களாகும்”.என்று தெரிவித்துள்ளது

நாட்டின் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்படும் என்ற கருத்து “எந்தவொரு நியாயமும் அடிப்படையும் அற்றதும் தவறானதும் ” என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திங்களன்று கூறியிருக்கிறது .

உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஆணைக்குழு கூறியதுடன் , வர்த்தமானியை திரும்பப் பெறவும், தேசிய சட்டங்கள் “ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை” பின்பற்றுவதை உறுதி செய்யவும் மற்றும் விதிமுறைகள் மற்றும் தரங்கள் மீறப்படுவதை “தடுக்குமாறும் ” அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது

-இந்து

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )