
பட்டினிக்கு தீர்வு காணத்தவறினால் ஜனாதிபதி ரணிலை சுற்றி வளைப்போம்
பட்டினிக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. பட்டினிக்கு தீர்வு காணத் தவறினால், அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம்.அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம்.அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம்.
குடிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு போதிய கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் தங்களின் பொறுமை மலிந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

