மர்மமான முறையில் இளைஞர்கள் காணாமல் போவதன் பின்னணியில் உள்ள இயக்கி யார்; அரசு சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கிறதா?

மர்மமான முறையில் இளைஞர்கள் காணாமல் போவதன் பின்னணியில் உள்ள இயக்கி யார்; அரசு சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கிறதா?

இந்நாட்டில் பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , கோட்டா கோகமவில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்து விசாரிக்கவும் அரசாங்கம் முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச அடக்குமுறையை நிறுத்துமாறும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறும் கோரி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் இந்நாட்டின் சிறைச்சாலைகளை இளைஞர்களால் நிரப்ப செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அரச மிலேச்சத்தனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மர்மமான முறையில் இளைஞர்கள் காணாமல் போவதன் பின்னணியில் உள்ள இயக்கி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை உடனடியாக இரத்து செய்து நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் தெரிவித்தார்.
சர்வகட்சி நாட்டை கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த கூட்டு வேலைத்திட்டத்திற்காக பாராளுமன்றத்தில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள செயற்குழு முறைமையை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கத்திடம் முன்மொழிவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )