
பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் மறைவு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் நேற்றையதினம் (08) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிறந்த ஒலிவியா நியூட்டன் இறக்கும் போது அவருக்கு வயது 73 என தெரிவிக்கப்படுகிறது.
கிரேஸ் என்ற பிரபல திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார், அதில் அவர் செண்டி என்ற பாடசாலை மாணவியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

