மருத்துவமனையில் இருந்து முதலில் சஜித்துக்கு அழைப்பை எடுத்த ரணில்!

மருத்துவமனையில் இருந்து முதலில் சஜித்துக்கு அழைப்பை எடுத்த ரணில்!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர், தேசிய மருத்துவமனையில் இருந்து முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தனக்காக எடுத்த நடவடிக்கைகளுக்கு ரணில் சஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த செயல்முறையை இதோடு நிறுத்தி விடாமல், தொடர்வதாக சஜித் பிரேமதாசவிடம் ரணில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நான் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். அதன் பிறகு, நான் அனைத்துத் தலைவர்களையும் சந்திப்பேன் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )