
தையிட்டி பகுதியில் மீண்டும் இன்று போராட்டம் ஆரம்பம்; நாளையும் முன்னெடுப்பு!
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாதாமாதம் முன்னெடுக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மாலை-04.30 மணியளவில் மேற்படி விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி இன்று மாலை-06.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாகப் பூரணை தினமான நாளை வியாழக்கிழமை (10) காலை-06.30 மணி தொடக்கம் மாலை-06 மணி வரை இதே கோரிக்கையை முன்வைத்துத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.
இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.