உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே..!; ​மைத்திரி பகிரங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே..!; ​மைத்திரி பகிரங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் செய்திக்கான நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர் காலம் தொட்டு மகிந்த காலம் வரை இந்நாட்டில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதுபோன்ற ஒரு சம்பவமே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எனக்குத் தெரிந்த விடயங்களை நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்துள்ளேன். அவற்றை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ். இயக்கமேயாகும். அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.உளவுப் பிரிவும் அதனை உறுதி செய்துள்ளது.

கருணா, பிள்ளையான் ​போன்றோர் கடந்த காலங்களில் சிங்கள பௌத்தர்களை, பௌத்த பிக்குகளைப் படுகொலை செய்தவர்கள்.

அவர்களுக்கு எனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்றும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )