போப்பின் இறுதிச் சடங்கு… இரண்டு மைல் ஊர்வலம்

போப்பின் இறுதிச் சடங்கு… இரண்டு மைல் ஊர்வலம்

உலகெங்கிலும் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய போப் பிரான்சிஸின் இறுதிப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது.

போப்பாண்டவரின் இழப்பால் உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர் விரும்பியது போலவே எளிமையான இறுதிச் சடங்கிற்காக வத்திக்கானில் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ரோமில் வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும், உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வழிபாடு தொடங்கும்.

இந்த வழிபாட்டு முறை கார்டினல்கள் கல்லூரியின் டீனால் வழிநடத்தப்படும், மேலும் இந்த வரலாற்று நிகழ்விற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களுடன் உலகின் முதன்மையான தலைவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் போப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லஸுக்கு பதிலாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோரும் கலந்துகொள்ள இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மற்றும் அரிய நிகழ்வில் பங்கேற்க பல நாடுகள் தங்கள் நாட்டுத் தலைவர்களையோ அல்லது அரசாங்கத் தலைவர்களையோ அனுப்ப வாய்ப்புள்ளது. சடங்குகளை கார்டினல்கள் முன்னெடுப்பார்கள், கார்டினல்கள் கல்லூரியின் டீன் ஜியோவானி பாட்டிஸ்டா ரே இந்த சேவையை வழிநடத்துவார்.

இரண்டு மைல் நீளம் கொண்டதாக எதிர்பார்க்கப்படும் இறுதி ஊர்வலம், புனித பீற்றர் பசிலிக்காவை சென்றடைந்து, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். ஆயிரக்கணக்கான விசுவாசிகள் பார்க்கவும் பிரார்த்தனை செய்யவும் போப்பாண்டவரின் உடல் பேராலயத்தின் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும்.

இறுதிச் சடங்கைத் தொடர்ந்து, போப்பின் உடல் வத்திக்கானுக்கு வெளியே உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். வழக்கத்திற்கு மாறாக போப் பிரான்சிஸ் உடல் சாண்டா மரியா மாகியோரில் உள்ள ஒரு எளிய நிலத்தடி கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் வத்திக்கான் சுவர்களுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஆவார். அடக்கத்திற்கான செலவுகளை ஈடுகட்ட பெயர் குறிப்பிடப்படாத ஒரு நன்கொடையாளரை அவர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சடங்குகள் நடக்கும் சனிக்கிழமை ஒன்பது உத்தியோகப்பூர்வ துக்க நாட்களில் முதல் நாளாக இருக்கும், இது பாரம்பரிய காலமாக நோவெம்டியல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த 9 நாட்கள் முடிந்ததும், அடுத்த போப்பைத் தெரிவு செய்வதற்கான ரகசிய மாநாடு முறைப்படியாகத் தொடங்கும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )