
மொட்டின் புதிய தேர்தல் செயற்பாட்டு நிலையம்
எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுப்பதற்காக புதிய தேர்தல் செயற்பாட்டு நிலையமொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைத்துள்ளது.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் கட்சித் தலைமையகத்திற்கு அருகில் இந்த தேர்தல் செயற்பாட்டு நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழா நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமை முற்பகல் சுபநேரத்தில் அந்த நிலையத்தை திறந்து வைத்தார்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பெருமளவான ஊழியர்களை கொண்டதாக இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்கும் வகையிலேயே இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தொகுதிகளையும் இணைத்து கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நிலையத்தை அமைத்துள்ளதாகவும் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

