
பிரிந்து செல்வதற்குத் தயாராக இருக்கிறோம்
நாட்டுக்காக எவருடன் இணைந்து செயற்படவோ, பிரிந்து செயற்படவோ தாம் தயாராகவே இருக்கின்றோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷ அதன்போது மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகதான் இருக்கின்றோம். ஆனால் வேட்பாளர்தான் இன்னும் கிடைக்கவில்லை. ஆணைக்குழு தேர்தல் திகதிகளை கூறும், நாங்கள் செய்ய வேண்டியதை செய்துகொண்டு போகின்றோம். ஜுலை 18ஆம் திகதிக்கு முன்னர் எங்கள் வேட்பாளர் தொடர்பில் அறிவிப்போம். அந்த விடயம் தொடர்பில் கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜூன் 18 ஆம் திகதி அறிவிப்பார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும் எவ்வாறாயினும் நாட்டுக்காக எவருடன் இணையவோ, பிரிந்து செல்லவோ நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

