மே தின கூட்டத்தில் முக்கிய அரசியல் தீர்மானங்கள்

மே தின கூட்டத்தில் முக்கிய அரசியல் தீர்மானங்கள்

மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை காட்டுவதுடன் முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என அரசதரப்பு எம்.பி.யான காமினி லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் நடத்தவுள்ளோம் . மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை காட்டுவதுடன் முக்கிய அரசியல் தீர்மானங்கள் எம்மால் அறிவிக்கப்படும்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாங்களே உருவாக்கினோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் நஷ்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். நஷ்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )