அனுர விவாதத்துக்கு தயார் ; ஆனால் காலம் குறித்து சஜித் தரப்பு தயக்கம்

அனுர விவாதத்துக்கு தயார் ; ஆனால் காலம் குறித்து சஜித் தரப்பு தயக்கம்

ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் தயாராகவே இருக்கின்றார் என்றும், ஆனால் ஜே.வி.பியினரால் அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் அந்த விவாதத்தை நடத்த முடியாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பொருளாதார குழுக்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நேரடி விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி தலைவர அனுகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாகவும் இதன்படி மே 7, 9, 13 அல்லது 14ஆம் திகதிகளில் தினமொன்றில் அந்த விவாதத்தை நடத்த முடியுமென்று அறிவித்து தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளதாவது,
ஒரு பக்கச்சார்பாக தினங்களை தீர்மானித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் அந்த கடிதத்தில் பொருளாதார குழு தொடர்பான விவாதம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

இதனால் இம்மாதம் 25 அல்லது 26ஆம் திகதியன்று நாங்கள் பாராளுமன்றத்தில் பொதுவான இடத்தில் கலந்துரையாடி விவாதம் நடத்த வேண்டிய தினம், இடம், ஒளிபரப்பு செய்யும் ஊடகம் தொடர்பில் தீர்மானமெடுக்க வேண்டும். ஆனால் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் அந்த விவாதத்தை நடத்த முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )