கிழக்கில் அரசினால் பெரும் காணிக் கொள்ளை

கிழக்கில் அரசினால் பெரும் காணிக் கொள்ளை

அரசாங்க தரப்பினர் தமது நட்பு வட்டார நண்பர்களுடன் இணைந்து, அரசாங்க-தனியார் ஒப்பந்தங்களை அமுல்படுத்தி, பாரியளவிலான காணி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்த காணி கொள்ளை பெருமளவில் நடந்து வருகிறது.

இதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, பாரிய அளவில் இடம் கைப்பற்றல் நடக்கினறதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், அம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங் கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது ,இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

தேர்தல் வருடத்தில் அரசாங்க தரப்பினர் தமது நட்பு வட்டார நண்பர்களுடன் இணைந்து, அரசாங்க-தனியார் ஒப்பந்தங்களை அமுல்படுத்தி, பாரியளவிலான காணி கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இந்த காணி கொள்ளை நடந்து வருகிறது.

இதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, பாரிய அளவில் இடம் கைப்பற்றல் நடந்து வருகிறது, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் யாரும் சிக்க வேண்டாம், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்.

நட்புவட்டார முதலாளித்துவத்தால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு தேவை போலி குடும்பத்துக்கு அஞ்சும் தலைமையா?, வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டின் நிதி வளத்தை பொய்யாக அழிக்கும் சவாரி தலைவர்களா? அல்லது வெறும் வாய்ச் சொல் தலைவர்களா? இல்லை என்றால் அதிகாரம் இல்லாமலும் மக்களுக்காக சேவைகளை முன்னெடுக்கும் தலைவர்களா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )