
மகிந்த தலைமையில் கூடிய மொட்டுக் கட்சி; பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் மற்றும் புத்தாண்டுக்குப் பின்னர் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட விடயங்களை ஆராயும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இக்கூட்டம் மாலை 4.30 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் தேர்தல்களின் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலும் இதன்போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கூட்டணிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொண்டமை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.