இலங்கைக்கு வரவிருந்த அபாயகரமான பொருட்கள்; அமெரிக்க ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்

இலங்கைக்கு வரவிருந்த அபாயகரமான பொருட்கள்; அமெரிக்க ஊடகங்கள் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகிய இலங்கை வரவிருந்த சிங்கப்பூர்சரக்குக் கப்பலில் 764 தொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் சென்றுள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தகவல்களை காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

56 கொள்கலன்களில் – பெரும்பாலும் அரிக்கும் பொருட்கள், எரியக்கூடிய பொருட்கள், இதர அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் மற்றும் லித்தியம்-அயன் பட்டரிகள் உட்பட ‘வகுப்பு-9 ‘அபாயகரமான பொருட்கள் இந்த கழிவுகளில் அடங்கும் என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை கூறுகிறது. அதன் மற்ற 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை தீர்மானிக்க கப்பலின் பொருட்கள் பட்டியலை இன்னும் பகுப்பாய்வு செய்கிறது.

இந்த சரக்கு கப்பலானது, கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று அமெரிக்க பால்டிமோர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது இன்னும் தெரிய வராதுள்ள நிலையில் இந்த கப்பலின் அடுத்த பயணத் திட்டமிடலானது கொழும்பிற்கானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்னாபிரிக்காவின் கேப் ஒஃப் குட் (Cape of Good) ஹோப்பைச் சுற்றி, 27 நாட்களை கடந்து புத்தாண்டுக்குப் பின்னர் கப்பல் இலங்கையை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகள், சுழியோடிகள் பாதுகாப்பற்றவை என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )