உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை ஏவியவர்களே புத்தகம் எழுதுகின்றனர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை ஏவியவர்களே புத்தகம் எழுதுகின்றனர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் எழுதி வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயல் எனத்தெரிவித்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்

இந்த குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு உள்ளதெனவும் கூறினார்

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இன்று உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் எனக் கூறுகின்றார் அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன . கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பிள்ளையான் ஆகியோர் புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம்.

ஏனென்றால் இந்த தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா சிறந்த ஆதாரங்களை வைத்து நிரூபித்து இருக்கின்றார. அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர்.அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது . ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் . அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதியாக இருந்தவர் அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )