
கர்மா!
சொட்டு சொட்டாய்
விழுகின்ற
துளி நீரை
சுருக்கென்று
விழுங்கிக் கொள்ளும்
சுடு மணலாய்….
மண்ணுக்குள்
உறங்கிக் கொண்டிருக்கும்
விதைகளை
எழுப்பிடவே..
பொதுநலமாய்.. இயற்கையாய்..
நான் இருக்க…..
நீ மட்டும்
சுயநலமாய்…
ஏன்
குறிஞ்சியை
குவாரி ஆக்கினாய்?
முல்லையை
காங்கிரிட் ஆக்கினாய்?
மருதத்தை
நெகிழியால் நிரப்பினாய்?
நெய்தலில்
கழிவுகளை கலக்கினாய்?
பாலையும் கடத்தினாய்?
அரசன்
அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்.
மனிதர்களால்
ஐவகை நிலங்களும்
மாண்டு விட்டன!
நம்மை
பழி தீர்க்கவே
பயணிக்கத்
தொடங்கி விட்டன!
இனி…!
ஒன்றும் செய்ய இயலாது.
மண்டியிடுவோம்…
இயற்கை முன்
காத்திருக்கலாம் நாம்.
நம் மீது
கருணை கொள்ளுமா என்று..
-முல்லை பாஸ்கர்
CATEGORIES இலக்கியம்