
இலங்கையில் சம்பாதிப்பு அமெரிக்காவில் செலவழிப்பு; பயணியாகவே பஸில்
இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் பயணியாகவே பஸில் ராஜபக்ஷ இங்கே வருகின்றார் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சி பாராளுமன்ற உறுப்ப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளுக்காக பஸில் ராபஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை பிவித்துறு ஹெலஉறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியளார் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது உதய கம்மன்பில மேலும் கூறுகையில்,
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கியில் அமெரிக்கா பிரஜையான அவருக்கு கட்சியின் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது தொடர்பில் நாங்கள் விரும்புகின்றோம். அதன்படி அமெரிக்காவில் சம்பாதித்து இங்கே செலவு செய்யும் சுற்றுலா பயணிகளையே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணிகள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்.