மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு?; சாகலவின் தலைமையில் இந்தியா செல்லும் குழு

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு?; சாகலவின் தலைமையில் இந்தியா செல்லும் குழு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இந்தப் பிரச்சினையானது இரு நாட்டு அரசாங்கங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இடையிடையே பிரச்சினை அதிகரித்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே இறுதித் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இந்திய அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை நிபுணர்கள் குழுவொன்றை வழிநடத்த ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவை அவர் நியமித்துள்ளார்.

அண்மைய தசாப்தங்களில் இழுவை மடி வலை முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் புகுந்து மீன்பிடிப்பது இலங்கை மீனவர்களிடையே கடுமையான கவலையாக உள்ளது.

யுத்த காலத்தில் வடபகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத போது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் புகுந்து மீன்பிடித்து வந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன், அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக சுமார் 170 இந்திய மீனவர்கள் இலங்கை கைதாகி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சமீபத்தில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர், மேலும் இந்தியாவில் சில மீனவர் குழுக்கள் தங்கள் நாட்டில் இதற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் .

தமிழ்நாட்டில் உள்ள இழுவை படகு உரிமையாளர்கள் தமிழக மாநில அரசாங்கத்தின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றனர், இது புது டில்லிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )