
முருகனின் தாயார்,சகோதரி சாந்தனுக்கு அஞ்சலி
சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட எடுத்துவரப்பட்டு கிளிநொச்சியில் பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி இடம்பெற்று தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்திக்கு முன்னால் சட்டத்தரணி புகழேந்தியிடம் சாந்தனுடன் இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கொடிகாமத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அப்போது,சாந்தனுக்கு ஏற்பட்ட துயரத்தை சுட்டிக்காட்டிய அவர் 33 வருடத்தின் பின் மகன் வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் உயிரின்றி வந்ததால்.எந்தவொரு தாய்க்கும் இப்படியொரு துயரம் ஏற்பாடாகி கூடாதெனவும் கதறியழுது கூறிய போது அனைவரும் அழுத்தத்தை காண முடிந்தது.