
திருச்சி சிறப்பு முகாமில் முருகன், சக சிறைத் தோழர்கள் அஞ்சலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனுக்கு சக சிறைத் தோழர்களான முருகன் உள்ளிட்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி சிறப்பு முகாமில் அஞ்சலி செலுத்தினர்.
சாந்தனின் திருவுருவப் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை – திருச்சி முகாமில் தற்போது முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை உடனடியாக இலங்கை திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.