ராஜபக்சக்களுடன் டீல் போடமாட்டேன்

ராஜபக்சக்களுடன் டீல் போடமாட்டேன்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், ஒரு குடும்பம் அதன் கௌரவத்தைப் பெற்று நாட்டை முழுமையாக எழுதி எடுத்துக் கொண்டு பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கினர். அப்படிப்பட்ட ராஜபக்சர்களுடன் நான் டீல் போட்டதில்லை .இனிமேலும் போடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 101 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, நிகவெவ அணுர மகா வித்தியாலயத்திற்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,
உண்மையில் இது தேர்தல் வருடம் தான்.இந்த வருடம் தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தல்களை நடத்த தற்போதைய ஜனாதிபதி பெரிதும் விரும்புவதில்லை. ஜனாதிபதி தேர்தலை நடத்த தற்போதைய ஜனாதிபதிக்கு விருப்பமில்லை என்றாலும், இது தேர்தல் வருடம். இங்கு மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்கள் இவ்வாறு சரியான தீர்மானம் எடுத்தால் இந்த நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
இடதுசாரியாக இருந்தாலும் சரி, வலதுசாரியாக இருந்தாலும் சரி எந்த கட்சிக்கு டொலரையும் ரூபாவையும் ஈட்ட முடியாதோ, அந்த கட்சி பயனற்றது.
மல உர மோசடி, நானோ உர மோசடி என அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருமளவு பணத்தை ஏமாற்றி திருடியுள்ளனர். வங்குரோத்தான நாட்டில் உரத்தில் ஏமாற்றி திருடிய அரசாங்கமே நாட்டை ஆண்டு வருகிறது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்று அவற்றை வெளிக்கொணர்ந்தது,இதனை பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், ஒரு குடும்பம் அதன் கௌரவத்தைப் பெற்று நாட்டை முழுமையாக எழுதி எடுத்துக் கொண்டு பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கினர். அப்படிப்பட்ட ராஜபக்சர்களுடன் நான் டீல் போட்டதில்லை இனிமேல் போடப் போவதும் இல்லை.மக்களுடன் மாத்திரமே எ னக்கு டீல் உண்டு என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )