
சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார்.எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாண்டு தேர்தல் உறுதியாக நடைபெறும்.
அத்தோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்வது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.