வெடுக்குநாறி மலையை அபகரிக்க மீண்டும் முயற்சி?; பிக்குகள் குழு அங்கு சென்று ஆராய்வு

வெடுக்குநாறி மலையை அபகரிக்க மீண்டும் முயற்சி?; பிக்குகள் குழு அங்கு சென்று ஆராய்வு

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று ஆராய்ந்துள்ளது.

இராணுவத்தின் பாதுகாப்புடன் இந்தக் குழுவினர் வெடுக்குநாறிமலைக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன் போது, இது தங்களது இடம் என அந்தப் பௌத்த பிக்குகள் குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை முற்றாக மறுத்த ஆலய நிர்வாகத்தினர், இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் எனத் தெரிவித்து அது தொடர்பான பல்வேறு விடயங்களையும் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு நேற்று வந்த பௌத்த குருமாரை இராணுவத்தினரே தமது உழவு இயந்திரத்தில் ஏற்றிசென்றமை தெரிய வந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் நேற்று அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் உள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தனது உழவு இயந்திரத்தில் அந்தக் குழுவினரை அழைத்து சென்றமை தெரியவந்துள்ளது.

குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினரே பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )