தமிழ் மக்களுக்கு இன்றே சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்குமாம்;  யாழில் இப்படி சொன்ன சரத்வீரசேகர

தமிழ் மக்களுக்கு இன்றே சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்குமாம்; யாழில் இப்படி சொன்ன சரத்வீரசேகர

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.

நான் நினைக்கின்றேன் இன்று தான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என்று அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம்.

ஆனால் தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு சாதியினர் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள் வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )